நம்மை அளப்போம்
பலவுள் தெரிக
Question 1.
ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்; மகாமௌனம் – அடிகள் புலப்படுத்துவது
அ) இரைச்சல்
ஆ) குறைக்கும் கூத்தாடும்
இ) நிரைகுடம் நீர்தளும்பல் இல்
ஈ) புற அசைவுகள் அகத்தினை அசைக்க இயலாது.
Answer:
இ) நிரைகுடம் நீர்தளும்பல் இல்
Question 2.
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் ………….. தொடர்களில் வெளிப்படும் செய்திகள்.
1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.
2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.
அ) 1-சரி, 2-தவறு
ஆ) 1-தவறு, 2-சரி
இ) 1-தவறு, 2-தவறு
ஈ) 1-சரி, 2-சரி
Answer:
ஈ) 1-சரி, 2-சரி
Question 3.
பொருத்துக.
அ) ஆமந்திரிகை – 1. பட்டத்து யானை
ஆ) அரசு உவா – 2. மூங்கில்
இ) கழஞ்சு – 3. இடக்கை வாத்தியம்
ஈ) கழை – 4. எடை அளவு
அ) 3, 1, 4, 2
ஆ) 4, 2, 1, 3
இ) 1, 2, 3, 4
ஈ) 4, 3, 2, 1
Answer:
அ) 3, 1, 4, 2
Question 4.
வேறுபட்டதைக் குறிப்பிடுக.
அ) அண்மைக் காட்சித் துணிப்பு
இ) நடுக்காட்சித் துணிப்பு
ஆ) சேய்மைக் காட்சித் துணிப்பு
ஈ) காட்சி மறைவு
Answer:
ஈ) காட்சி மறைவு
குறுவினா:
Question 1.
எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?
Answer:
• நகை (சிரிப்பு)
• அழுகை
• இளிவரல் (சிறுமை)
• மருட்கை (வியப்பு)
• அச்சம் (பயம்)
• பெருமிதம் (பெருமை)
• வெகுளி (சினம்)
• உவகை (மகிழ்ச்சி)
Question 2.
பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.
Answer:
• திரைப்படத்தின் உணர்வுகளை வெளிக்கொணர உதவுவது பின்னணி இசையே.
• பின்னணி இசைச் சேர்ப்பு, மவுனம் இவ்விரண்டும் சில வேளைகளில் திரையில் உணர்வுகளை வெளிக்கொணர உதவுகின்றன.
• இசை பாத்திரங்களின் மனக்கவலைகள் அலைக்கழிப்புகள் ஆகியவற்றை எதிரொலிப்பதாகவும் இருத்தல் அவசியமானது.
Question 3.
ஒருமுக எழினி, பொருமுக எழினி குறிப்பு எழுதுக.
Answer:
ஒருமுக எழினி:
• நாட்டிய மேடையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படும் ஒரு முகத்திரை
பொருமுக எழினி:
• மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்திரை
Question 4.
மூச்சு நின்றுவிட்டால்
பேச்சும் அடங்கும் – கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக.
Answer:
• “எரிவதை நிறுத்தினால் கொதிப்பது தானே அடங்கும்”
• “சான்றோர் கொள்கையும் மாண்டால் அடங்கும்"
சிறுவினா
Question-1.
நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தைக் கூறுக.
Answer:
சிலம்பு காட்டும் நாட்டிய அரங்கத்திற்கான இடம் :
“எண்ணிய நூலோர் இயல்பினில் வழாஅது
மண்ண கம் ஒருவழி வகுத்தனர்”
கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்பு மாறாத நன்னிலத்தை ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர்.
மூங்கில் கொணர்தல் :
பொதிகைமலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களில், ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கில்களைக் கொண்டு வந்தனர்.
ஆடல் அரங்கம் அமைத்தல் :
“நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்.”
நூல்களில் கூறப்பட்ட முறையில் மூங்கில் கோல் அளவுகொண்டு அரங்கம் அமைத்தல்.
மூங்கில் அளவுகோல் :
கைப்பெருவிரலில் இருப்பத்து நான்கு அளவு கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டனர். அதில் ஏழுகோல் அகலமும் எட்டுகோல் நீளமும், ஒருகோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கம் அமைக்கப்பட்டது.
Question 3.
திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
Answer:
காட்சியின் முக்கியத்துவம்:
• காட்சி என்பது கதை நகர்வுக்கு உதவுவது.
• திரைப்படத்தின் காட்சிகள் சிறப்பாக அமைந்தால் வசனத்திற்கு இரண்டாம் இடம்தான்.
• திரைப்படத்தில் வசனம் இன்றிக் காட்சிகளை அடுத்தடுத்து வைப்பதன் மூலம் கதை
சான்று:
முதல் காட்சியில் தோழி ஒருத்தி கதாநாயகியிடம் தொடர்வண்டிப் பயணச்சீட்டைக் கொடுப்பாள்.
• அடுத்தக் காட்சியில் கதாநாயகி தொடர்வண்டியில் இருப்பாள்.
• முதல் காட்சியில் எண் 7, வீரையா தெரு… என்று ஒருவர் முகவரியைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அந்த முகவரியில் சென்று காட்சி நிற்கும்.
இவ்விரண்டு தரவுகளிலும் காட்சி அமைப்பே ஆற்றல் உள்ளதாக வரையறுக்கப்பட்டுள்ளது.
Question 4.
கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக.
Answer:
1. நிரந்தரமாக இருக்க எண்ணினோம்.
நிரந்தரமில்லாமல் சென்றுவிடுகிறோம்.
2. உயர்ந்த கொள்கைகளும் உயிர்போனால்
உதாசினப்படுத்தப்படும்.
3. உண்மைகள் எல்லாம் சில உண்மைகளைத்
திரைமறைவு செய்வதற்கே.
4. ஆர்ப்பரிப்பில் அடங்காத மனம்
அமைதியில் அடங்கிவிடும்.
5. கடலின் உள்நிகழ்வே கடல் அலைகள்
மனதின் வெளிப்பாடே புறச்செயல்கள்
• நகுலனின் கவிதைகளே இங்கே பேசப்பட்டுள்ளன. நகுலனின் கவிதையின் முழங்கு பொருளே இவை.
• எனவே, கவிஞன் தான் நினைத்தவற்றைச் சொல்வடிவத்தில் சுருக்கிச் சொல்ல முற்படும்போது உதிர்ந்த முத்துக்களே இவை.
நெடுவினா
Question 1.
திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக.
Answer:
திரைப்படத்துறை – ஒரு கலை:
புதுமை வாழ்வில் எத்தனையோ அற்புதங்களைக் கண்டு மகிழ்கிறோம். நாடகத்தின் மறுமலர்ச்சியாக, மக்களை மயக்கும் கலையாக திரைப்படத்துறை தவிர்க்கமுடியாத ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இந்தத் துறை வளர்ச்சியின் பின்னால் எத்தனைத் துறைகள் அடங்கியிருப்பது பற்றி யாரும் திரும்பிப் பார்ப்பது கிடையாது.
சான்றாக, கதை, கதை-உணர்த்தும் நீதி, எண்ணத்தை ஈர்க்கும் வசனம், கதாநாயகன், நாயகிகள் தேர்வு, ஆடை அலங்காரம், இடங்கள் தேர்வு, புகைப்படக் கருவி, நடனக் குழுக்கள் என்று பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். இதற்குள் எத்தனையோ நிகழ்வுகள் உள்ளன.
எல்லாக் கலைஞர்களும் அருகி வரும் நிலையில் இத்துறையின் வளர்ச்சி உயர்ந்த நிலையில் உள்ளது. ஒரு திரைப்படம் எடுக்க எத்தனை கோடிகள், எவ்வளவு செலவீனங்கள் என வளர்ந்து கொண்டே போகும். இதற்கு இடையில் குடும்பப் படங்கள், அரசியல் படங்கள், பக்திப் படங்கள் என்றும் பற்பல பிரிவுகளில் எடுக்கப்படுகின்றன.
இவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு பிரிவிலும் விற்பன்னர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கென்று திரைப்படத்துறை சார்ந்த படிப்புகளும் உருவாகி உள்ளன. இத்துறையில் முழு ஈடுபாடு கொண்டால்தான் சிறக்கும்.
இதைப்பலகலைகளின்சங்கமம்என்றே கூறலாம். நடிகர்களின்நடிப்புக்கலை,ஒப்பனைக்கலை, வசனம் (பேச்சுக்கலை), (கேமரா) படமெடுப்பதில் கலையம்சம், ஒலிப்பதிவுக்கலை, ஒளிப்பதிவுக் குழு நடனக் கலை என ஒட்டுமொத்த கலைஞர்களால் மட்டும்தான் இது நடந்தேறி வருகிறது.
கணினி சம்பந்தப்பட்ட ஒத்துழைப்புகளாலும் உதவியாலும் இத்துறை மெருகூட்டப்படுகிறது. கண்டுபிடிப்புகள் அதிகமானாலும் கலையம்சம் நிறைந்தது திரைப்படத்துறையே. எனவே கலைகளின் சங்கமம் என்பது பொருத்தமானதே.
திரைப்படத்துறை ஆயிரம் பேரையல்ல, ஆயிரம் குடும்பங்களை வாழவைக்கிறது. கேளிக்கைகள் நிறைந்த இவ்வுலகில் திரைப்படத்துறைக்கு மட்டும் கலைஞர்கள், தொழில்நுட்ப 1121 வல்லுநர்கள், ஒப்பனைக்காரர்கள், ஆடை அலங்கார வல்லுநர்கள், ஆண்-பெண் நடனக் குழுக்கள், சண்டைக் காட்சிகளில் பங்குபெற எதிர்த்தலைவன் மற்றும் துணைவர்கள், உதவியாளர்கள் என எத்தனையோ ஆட்கள் இதை நம்பி இருக்கிறார்கள்.
திரைப்படத்துறையில் மட்டும் கால் வைத்து விட்டால் அவர்களுக்கு மற்ற தொழில் மறந்துவிடுகிறது. எல்லாம் இருந்தவர்கள் ஏன் இத்துறைக்கு வருகிறார்கள் என்று தெரிவதில்லை. சென்னை-கோடம்பாக்கத்தில் கலைத்துறை சார்ந்த குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் இதை நம்பியே வாழ்ந்து வருகின்றன.
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் இறைப்பணி” என்பது போல அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்க்கையும் வாய்ப்பும் கொடுக்கும் துறையாக திரைப்படத்துறை திகழ்கிறது. இந்தக் கலையைக் கற்க முடியாது. பயிற்சியால்தான் பெற முடியும். மறவோம் கலைஞர்களை! மதிப்போம் கலைஞர்களை!
Question 2.
மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக.
Answer:
சுள்ளிக்காட்டுப் பாலச்சந்திரன், முப்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு கூலி. திரையரங்கில் வெளியாகும் திரைப்படத்தை ஆட்டோ ரிக்சாவில் விளம்பரப்படுத்தும் பையன்.
இருபது வருடங்களுக்குப் பின்:
இருபது வருடங்களுக்குப் பின், கேரள வீதிகளில் அன்று குரல் விற்றுப்பிழைத்த பையன் சிவாஜிகணேசன் வீட்டில் அவரோடு உணவருந்தும் அற்புதச் சூழல் இன்று.
சிவாஜியும் மோகன்லாலும்:
1995இல் வி.பி.கெ.மேனன் படத்தில் சிவாஜியும் மோகன்லாலும் நடிக்க சம்மதித்தனர். அப்படத்தின் இயக்குநர் ராஜிவ் நாத். ஜான்பால் என்பவர் திரைக்கதை. படம் பற்றிப் பேச நடிகர் திலகம் வீட்டிற்குச் செல்ல நேரிட்டது.
வீட்டின் தோற்றம்:
ஒரு நாள் சிவாஜியின் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றோம். சிவாஜியின் வீடல்ல அது அரண்மனை. கதவில் அழகிய வேலைப்பாடுகள்; தங்கத்தால் இழைத்த வேலைப்பாடுகள்; தங்கத்தால் இழைத்த இரண்டு பெரிய யானைத் தந்தங்கள். மாடிக்குச் சென்றோம். மாடி ஏறும்போது கட்டபொம்மனின் கம்பீரத் தோற்றத்தில் சிவாஜி. அடுத்து சத்ரபதி சிவாஜி. இன்னொரு புறத்தில் பிரஞ்சு அரசு வழங்கிய செவாலிய விருது கண்ணாடிப் பெட்டியில் இருந்தது.
சிவாஜியின் வரவேற்பும் உபசரிப்பும்
மாடியில் ரசித்தபடியே சென்ற எங்களை மாம்பழச் சாறு கொடுத்து வரவேற்றனர் தலைவனும், தலைவியும். அப்போது அங்கே சிங்க நடை நடந்து வரும் ராஜராஜ சோழனைப் பார்த்து அவர் கால்தொட்டு வணங்கினோம். பதிலுக்கு ஆசிர்வாதம் செய்தார். உட்காரச் சொன்னார். ராஜிவ் நாத்தும் ஜான்பாலும் சிவாஜியிடம் கதை – கதாபாத்திரம் பற்றிப் பேசினர்.
சிவாஜியின் அங்க அசைவுகள்:
அவர்களிடம் பேசும்போது புருவ அசைவு, கண்நோக்கு, முக அபிநயம், உதடு, கைவிரல், இவற்றின் செயல்பாடு கண்டு பாலச்சந்திரன் மெய்மறந்தார் ருத்ரன், கர்ணன், காளிதாசன், பாரதி, கட்டபொம்மன், ராஜராஜசோழன் இன்னபிற கதாபாத்திரங்களில் சிவாஜி பாலச்சந்திரனின் கண்களில் மின்னினார்.
சிவாஜி விசாரித்தல்:
ராஜிவ் நாத்திடம் பாலச்சந்திரனைக் காட்டி “இந்தப்பையன் யாரு என்றார் சிவாஜி. மலையாளக் கவிஞன் என்று அறிமுகப்படுத்தப்பட்டார். சுள்ளிக்காட்டுப் பாலசந்திரன் சிவாஜி பாலச்சந்திரனைப் பார்த்து வணக்கம் என்றார். எங்களை உள்ளே அழைத்தார்.
சிவாஜியின் புகைப்படங்கள்:
எகிப்தின் முன்னாள் அதிபர் நாசர் முதல் ராஜ்நபூர் வரை உள்ள முன்னோடிகளுடன் சிவாஜி 1 எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் கண்டோம்.
சிவாஜி-பட்டம்:
விழுப்புரத்தில் ஏழையாகப் பிறந்த சிவாஜி ஐந்து வயதிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தவர். அண்ணாதுரையின் சத்ரபதி சிவாஜியாக நடித்ததன் காரணமாக சிவாஜி பட்டம் கிடைத்தது. பராசக்திக்குப் பிறகு வெற்றியாளரானார் சிவாஜி. வீரபாண்டிய கட்டபொம்மனால் உலகப் பிரசித்திப் பெற்றார்.
சிவாஜியிடம் ராஜிவ்நாத்தின் கேள்வி:
சிவாஜியிடம் கட்டபொம்மனின் வசனம் ஞாபகம் இருக்கிறதா என்றார். ஒரு வசனம் சொல்ல முடியுமா என்றார்.
சிவாஜியின் வசனம்:
ஏர்பிடித்தாயா, களை வெட்டினாயா… மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே என்று சிங்கக் கர்ஜனை செய்தார் சிவாஜி. எல்லாம் ஒரே மூச்சில் மயங்கிப் போனோம் நாங்கள்.
சிவாஜயின் கேள்வி:
மலையாளத்தில் சரித்திர புராணம், நாடகங்கள் இல்லையா என்றார் சிவாஜி. இருக்கிறது என்றனர். உடனே ராஜிவ், பாலச்சந்திரனை ராவணனின் வசனத்தைச் சொல்லச் சொன்னார். சிவாஜியை வணங்கி, இராவணனாக மாறினார் பாலன். இலங்கையின் போர்க்கொடிகள் பறக்கட்டும்…. நானே வெல்வேன் என்று முடித்தார் பாலன். கைதட்டிப் பாராட்டினார்.
இராவண வேடத்தில் நீங்கள் (சிவாஜி) நடித்தால் நன்றாக இருக்கும். ராஜிவ்நாத் சிவாஜியிடம் சொன்னார். என்ன பண்றது எனக்கு மலையாளம் தெரியாதே என்றார் சிவாஜி. வயசும் ஆயிடுச்சி என்றாா சிவாஜி. அதன்பிறகு அன்னை கமலாவின் கைகளால் விருந்து சாப்பிட்டோம். எல்லாம் முடிந்து புறப்பட்டோம். வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தனர் சிவாஜி-கமலா தம்பதியினர். வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே திரும்பினோம்.
Question 3.
உங்கள் ஊர்ப் பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கட்டுரையாக்குக
Answer:
கலைகளை வளர்த்த பெருமைக்கு உரிய ஊர் கும்பகோணம். அவ்வூரில் பரதம், இசை, கருவி இசை முதலான கலைகள் இன்றளவும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த ஊரில்தான் மாபெரும் :6 கலைஞர்கள் கே.ஆர். இராமசாமி, எம்.ஜி.இராமச்சந்திரன், காளி.என். இரத்தினம் போன்றவர்கள் வாழ்ந்தார்கள்.
இது கும்பகோணத்திற்கே பெருமை தரக்கூடிய ஒன்று. கும்பகோணம் பக்தகோடித் தெருவில் வசிக்கும் பரதநாட்டிய கலைஞர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவர் பெயர் மாலா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அப்பா இல்லை; அம்மா மட்டும் உண்டு. கும்பகோணம் பள்ளிகளில் படிக்கின்ற பிள்ளைகளுக்கு பரதம் கற்றுக்கொடுத்து வருகிறார்.
எனது மகளுக்குக் பரதம் கற்றுத்தர அனுமதி கேட்டு, அவரிடம் சென்றிருந்தேன். ஒத்துக்கொண்ட அவர் தான் நாட்டியம் ஆடியபொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை என்னிடம் காட்டினார்.
எண்வகை மெய்ப்பாடுகளையும் வெளிக்கொணர்ந்து அவர் பரதம் ஆடிய அழகு பாராட்டுதற்குரியது. அபிநயம், பாவனை, புருவ வளைவுகள், கைவிரலின் அசைவுகள் முதலானவற்றைப் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. இப்படியொரு நல்ல கலைஞர் சாதாரண வீட்டில் வாழ்கிறாரா என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்தது.
தில்லானா மோகனாம்மாள் என்ற திரைப்படத்தில் கதாநாயகி பத்மினி ஆடிய ‘மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன’ என்ற பாடல் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றோம். ஒரு பத்து நிமிடம் எங்களை அமரச் சொல்லிவிட்டு அந்த அறையிலேயே அபிநயம் பிடித்து அழகாக ஆடினார். அத்தகைய ஆட்டத்தை நாங்கள் இதுவரை பார்த்ததேயில்லை.