இலக்கணத் தேர்ச்சி கொள் Question 1. ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர் அ) சிவஞான முனிவர் ஆ) மயிலை நாதர் இ) ஆறுமுக நாவலர் ஈ) இளம்பூரணர் Answer: ஆ) மயிலை நாதர் Question 2. கூற்று 1 : காப்பியம் என்னும் சொல் காப்பு + இயம் எனப் பிரிந்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச் சிதையாமல் காப்பது என்றெல்லாம் பொருள் தருகிறது. கூற்று 2 : ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று நீலகேசி. அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு ஆ) கூற்று 2 சரி, கூற்று 1 தவறு இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு Answer: அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு Question 3. சரியானவற்றைப் பொருத்தித் தேர்க : அ) காதை – 1. கந்தபுராணம் ஆ) சருக்கம் – 2. சீவகசிந்தாமணி இ) இலம்பகம் – 3. சூளாமணி ஈ) படலம் – 4. சிலப்பதிகாரம் அ) 4, 3, 2, 1 ஆ) 3, 4, 1, 2 இ) 3, 4, 2, 1 ஈ) 4, 3, 1, 2 Answer: அ) 4, 3, 2, 1 Question 4. தவறான இணையைத் தேர்க : பாவகை - இலக்கியம் அ) விருத்தப்பா - நாலடியார் ஆ) ஆசிரியப்பா - அகநானூறு இ) கலிவெண்பா - தூது ஈ) குறள்வெண்பா - திருக்குறள் Answer: அ) விருத்தப்பா ...